அதிபர் TRUMP அகற்ற எலான் மஸ் பெரும் திட்டம்.. பணம் பாதாளம் வரை பாயும் ?

அதிபர் TRUMP அகற்ற எலான் மஸ் பெரும் திட்டம்.. பணம் பாதாளம் வரை பாயும் ?

அமெரிக்க அதிபர் ரம்பை பதவியிலிருந்து அகற்ற, எலான் மஸ்க் மறைமுகமாக அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார். அவரது டெஸ்லா நிறுவனப் பங்குகள் சரிந்து, ஒரே நாளில் அவருக்கு 150 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரம் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, எலான் மஸ்க் பணத்தை வாரி இறைத்தது மட்டுமல்லாமல், ரம் தனது பிரசாரங்களை அதிரடியாக நடத்த தனது பிரைவேட் ஜெட் விமானத்தையும் கொடுத்தார்.

ஒரு வகையில் சொல்லப்போனால், 2% வாக்குகள் வித்தியாசத்தில் ரம், கமலா ஹாரிஸை வென்றதற்கு எலான் மஸ்க்கும் ஒரு காரணம். இல்லையென்றால் ரம் தோல்வியடைந்திருப்பார். ஆனால், ரம் தனது நரித்தனத்தை தற்போது எலான் மஸ்கிடம் காட்ட ஆரம்பித்ததால், இருவருக்கும் இடையே பெரும் பனிப்போர் மூண்டுள்ளது. எலான் மஸ்க் ஒன்றும் சாதாராண ஆள் கிடையாது; தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை கொண்டவர்.

இதனால், அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் அமெரிக்க செனட்டர்களைப் பயன்படுத்தி ரம் பதவியைப் பறிக்க எலான் மஸ்க் திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அமெரிக்கர்கள் ரம் மேல் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், எலான் மஸ்க் இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

விரைவில் அமெரிக்க செனட் சபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அது நிறைவேறும் பட்சத்தில் அமெரிக்க அதிபர் ரம் பதவி இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குச் சரியான ஆதரவு இருக்க வேண்டும். அதாவது, ரம்பின் சொந்தக் கட்சியில் உள்ளவர்களே அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டி இருக்கும். இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.